Saturday, June 20, 2020

காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு தமிழக அரசு பாடநூலில் இடம் பெற செய்க…

காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு தமிழக அரசு பாடநூலில் இடம் பெற செய்க…
சென்னை அண்ணா சாலையில் காயிதே மில்லத் மணிமண்டபம் வழி காட்டு பலகை அமைத்திடுக…
தமிழக முதல்வரிடம் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் தோப்புத்துறை முனைவர்.அ.முகம்மது நூர்தீன் கோரிக்கை.!
தமிழகத்திற்கு அந்நிய முதலீட்டாளர்களை அழைக்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ் நாடு மாநில முதலமைச்சர் எடப்பாடி திரு.கே.பழனிச்சாமி அவர்கள் நேற்று 04/09/2019 புதன்கிழமை மாலை சான் பிரான்ஸிஸ்கோ நகருக்கு வருகை தந்தார்.
அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளிநாடு அமைப்பான அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் தோப்புத்துறை முனைவர்.அ.முகம்மது நூர்தீன்
காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு தமிழக அரசு பாடநூலில் இடம் பெற செய்ய வேண்டியும்,சென்னை அண்ணா சாலை பின்புறம் அமைந்துள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் செல்வதற்கு அண்ணா சாலையில் வழி காட்டு பலகை அமைத்திட வேண்டியும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு அங்கிருந்தபடியே படித்த முதல்வர் ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அருகில் இருந்தனர்.

No comments:

Post a Comment