அமெரிக்க காயிதே மில்லத் பேரவை QMF USA 2000
Wednesday, July 1, 2020
Wednesday, June 24, 2020
Monday, June 22, 2020
Saturday, June 20, 2020
காயிதே மில்லத் பேரவை-QMFUSA அமெரிக்க காயிதே மில்லத் பேரவை (QMF USA –Serving People since 2000) நிறுவன தலைவர் கணிப்பொறியாளர் முனைவர் தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
*
புனித ரமலானை
முன்னிட்டு அமெரிக்காவில்
சமய நல்லிணக்க
உரைப்பொழிவு* குருமகா சன்னிதானம்
தவத்திரு மதுரை
ஆதீனம் அவர்கள்,
அருட்தந்தை உயர்திரு ஜெகத்
கஸ்பர் அவர்கள், முனைவர்
பேராசிரியர் கவிமாமணி அப்துல்
காதர் ஆகியயோர்கள்
சிறப்பாக நேரலை
மூலம் சமய
நல்லிணக்க உரையாற்றினார்கள் திரு.அபுகான் அவர்கள் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளராக செயல்பட
திரு.அலியார்
அவர்கள் நன்றியுரை தெரிவிக்க நிகழ்ச்சி
இனிதே நிறைவு
பெற்றது
நிகழ்ச்சி முழுவதற்கும்
உதவியும் ஒத்துழைப்பு
அளிfத்தவர்களுக்கு
திரு.அபுகான்
நன்றி தெரிவித்ததுடன்
குறிப்பாக தொழில்நுட்ப
குழு சகோதரர்கள் தாமு, திளாவர்,
ராஜு பின்புலமாக இருந்து
இந்த சிறப்பான
நிகழ்வை நிகழ்த்தினார்கள்.
*நிகழ்ச்சி
ஏற்பாடு மற்றும்
அனுசரனை*
*வடஅமெரிக்கத்
தமிழர்கள்/அமெரிக்க அதிரை
சங்கம்-AAF/அமெரிக்க காயிதே
மில்லத் பேரவை-QMFUSA*
நேரலையில் பங்கு
கொள்ள முடியாதவர்கள்
இதை பார்த்து
பயன்பெறலாம்.
https://www.youtube.com/watch?v=IBmZc8vQ-Csவேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக காயிதெமில்லத் பேரவையின் உலக ஒருங்கிணைப்பாளரும், அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவருமான முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் வியாழக்கிழமை இரவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமை நிலையமான காயிதெமில்லத் மன் ஜிலில் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற அவசர செயற்குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் சமுதாய வேண்டுகோளின்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் பள்ளிக்கல்வியை ஆக்கூர் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.
பள்ளிப்படிப்பின் போதே மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜமால் முஹம்மது கல்லூரியில் கல்லூரிப் படிப்பினைப் பயின்றார்.
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக அமீரகத்தில் பணிபுரிந்து வரும் இவர் துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பத்துறையில் உதவித் தலைவராக இருந்து வருகிறார்.துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவராகவும், ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
அமீரகத்தில் சமுதாயப் பணிகளின் மூலம் இந்திய மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார்.
அமீரகத்தில் பணிபுரிந்து வந்தாலும் தாயகத்தில் சமூகநலப்பணி மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவலைக் கொண்டவர்.
இந்த அவசர செயற்குழுவில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சையத் சத்தார், மாநில நிர்வாகிகள், அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமீரகப் பிரமுகர்கள் வாழ்த்துஎம். அப்துல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்ட செய்தியறிந்து அமீரகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களது மகிழ்ச்சியினையும், வாழ்த்தினையும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்கா காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் தோப்புத்துறை முஹம்மது நூர்தீன், குவைத் காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் டாக்டர் அன்வர் பாஷா, சவுதி அரேபிய காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
செய்தி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )
காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு தமிழக அரசு பாடநூலில் இடம் பெற செய்க…
காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு தமிழக அரசு பாடநூலில் இடம் பெற செய்க…
சென்னை அண்ணா சாலையில் காயிதே மில்லத் மணிமண்டபம் வழி காட்டு பலகை அமைத்திடுக…
தமிழக முதல்வரிடம் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் தோப்புத்துறை முனைவர்.அ.முகம்மது நூர்தீன் கோரிக்கை.!
தமிழகத்திற்கு அந்நிய முதலீட்டாளர்களை அழைக்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ் நாடு மாநில முதலமைச்சர் எடப்பாடி திரு.கே.பழனிச்சாமி அவர்கள் நேற்று 04/09/2019 புதன்கிழமை மாலை சான் பிரான்ஸிஸ்கோ நகருக்கு வருகை தந்தார்.
அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளிநாடு அமைப்பான அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் தோப்புத்துறை முனைவர்.அ.முகம்மது நூர்தீன்
காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு தமிழக அரசு பாடநூலில் இடம் பெற செய்ய வேண்டியும்,சென்னை அண்ணா சாலை பின்புறம் அமைந்துள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் செல்வதற்கு அண்ணா சாலையில் வழி காட்டு பலகை அமைத்திட வேண்டியும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.
காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு தமிழக அரசு பாடநூலில் இடம் பெற செய்ய வேண்டியும்,சென்னை அண்ணா சாலை பின்புறம் அமைந்துள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் செல்வதற்கு அண்ணா சாலையில் வழி காட்டு பலகை அமைத்திட வேண்டியும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு அங்கிருந்தபடியே படித்த முதல்வர் ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
Subscribe to:
Posts (Atom)
-
காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு தமிழக அரசு பாடநூலில் இடம் பெற செய்க… சென்னை அண்ணா சாலையில் காயிதே மில்லத் மணிமண்டபம் வழி காட்டு பலகை அமைத...
-
https://www.amazon.com/dp/B08BNP1TGV/ref=sr_1_1?Adv-Srch-Books-Submit.x=22&Adv-Srch-Books-Submit.y=8&dchild=1&qid=159305221...



